தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி
📡 *NPRGI MEDIA* 📡
*நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது* .
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (30.01.2022) தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (29.01.2022) காலை 11.00 மணியளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் துறைத் தலைவர்கள் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
*உறுதிமொழி*
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடை பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின் பால் எனக்குள்ள முழு பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதி மொழி எடுத்துகொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் முன்னதாக சிறப்பு விருந்தினர் கல்லூரி முதல்வர் அவர்கள் வருங்கால தூண்களாகிய இளைய தலைமுறையினரை உருவாக்க கூடிய பேராசிரியர்கள் மாணவர்களிடத்திலோ மற்ற சமூகத்திலோ சாதி மத ஏற்றத்தாழ்வு போன்ற தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் தீண்டாமை இல்லாத மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கணினித் துறை உதவிப்பேராசிரியர் திரு .யோசுவா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆ.சிவகுமார் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்களும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி எஸ்.விசித்ரா மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
*Published on NPRGI MEDIA*
No comments