தேசிய பெண் குழந்தைகள் தினம்
நத்தம் என்பிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் (அணி எண் 195 & 196) சார்பாக இணையம் வாயிலாக சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருமதி எஸ்.அருள்மொழி, IAS அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, முன்னேற்றம் அவர்களுக்கான சுதந்திரம் சமூகத்தில் வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பெண் குழந்தைகள் தங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் கல்வியை ஓர் கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பெண் குழந்தைகளிடம் இருக்கும் தன்னம்பிக்கை அவர்களின் சரியான வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என அறிவுறுத்தினார். நிறைவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டாம் ஆண்டு கணிதத்துறை மாணவி ரிஸ்வானா பானு வரவேற்புரையாற்றினார். இரண்டாமாண்டு வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை மாணவி எம் அனீஸ் பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஆர்.இனியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிறைவாக இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவி கே. மேகா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் என்பிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்களும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர்.ஆ.சிவக்குமார் திருமதி. எஸ்.விசித்ரா மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments