Header Ads

*நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது* .

தேசிய வாக்காளர் தினம்






    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (25.01. 2022) தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் -195 & 196 சார்பாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. 

    இன்று நத்தம் என்.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் தின உறுதிமொழி காலை 11:30 மணி அளவில் கல்லூரி முதல்வர் முனைவர் பி.சரவணன் அவர்கள் தலைமையில் துறைத்தலைவர்கள் அனைத்துத்துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். 





 உறுதிமொழி 

    மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி , வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு  ஆட்படாமலும்  அல்லது எந்த ஒரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதி கூறுகிறோம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    முன்னதாக இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் முனைவர் பி. சரவணன் அவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்றும்  வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றும் தகுதியான அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். 

    இந்நிகழ்வில் கணினித் துறை உதவிப் பேராசிரியர் திரு. யோசுவா அவர்கள் வரவேற்புரையாற்றினார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆ.சிவக்குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.


 Published on : NPRGI MEDIA


 

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.